தற்போது கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. ஈ.ரோட்டில் இருந்து செல்லலாம். இரயில் நிலையம் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். மகாவிஷ்ணுவும், பிரமனும் வழிபட்ட தலம். இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது. இதனால் இத்தலம் திரிமூர்த்தித் தலம் என்றும் வழங்கப்படுகிறது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலம். அகத்தியர் பிரதிஷ்டை செய்து பூசித்த சிவலிங்கம் கோயிலில் உள்ள வன்னி மரத்திற்கு அருகில் உள்ளது. |